/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி வருவாய் கோட்டம்; தொகுதி எம்.எல்.ஏ., தீவிர முயற்சி
/
விக்கிரவாண்டி வருவாய் கோட்டம்; தொகுதி எம்.எல்.ஏ., தீவிர முயற்சி
விக்கிரவாண்டி வருவாய் கோட்டம்; தொகுதி எம்.எல்.ஏ., தீவிர முயற்சி
விக்கிரவாண்டி வருவாய் கோட்டம்; தொகுதி எம்.எல்.ஏ., தீவிர முயற்சி
ADDED : அக் 13, 2025 11:25 PM
வி க்கிரவாண்டியை தனி வருவாய் கோட்டமாக உருவாக்கிட வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வருவாய் கோட்டத்தை இரண்டாக பிரித்து, விக்கிரவாண்டி மற்றும் வானுார் தாலுகாக்களை உள்ளடக்கி, விக்கிரவாண்டியை தலைமையிடமாகக் கொண்டு, வருவாய் கோட்டத்தை உருவாக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து விக்கிரவாண்டியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் கோட்டம் உருவாக்கிடக் கோரும் கோரிக்கை மீது விரிவான அறிக்கையினை அனுப்புமாறு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு, தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்ட சபைக் கூட்டம், இன்று துவங்குகிறது. விக்கிரவாண்டி தனி வருவாய் கோட்டம் உருவாக்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொகுதி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.