/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவிலில் கைப்பந்து போட்டி கிராம செயல்வழி குழு ஏற்பாடு
/
ஆரோவிலில் கைப்பந்து போட்டி கிராம செயல்வழி குழு ஏற்பாடு
ஆரோவிலில் கைப்பந்து போட்டி கிராம செயல்வழி குழு ஏற்பாடு
ஆரோவிலில் கைப்பந்து போட்டி கிராம செயல்வழி குழு ஏற்பாடு
ADDED : ஜூன் 26, 2025 11:33 PM
வானுார்: ஆரோவில் கிராம செயல்வழிக்குழு கிராமப்புற இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற இளைஞர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வரும் ஆரோவில், கிராமப்புற செயல்வழிக்குழு, வரும் ஜூலை 6ம் தேதி ஆரோவில் சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இப்போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் முன் பதிவு கட்டணம் 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தைலாபுரம், பொம்மையார்பாளையம், இடையஞ்சாவடி, அன்னை நகர் உள்ளிட்ட 10 கிராமத்தைச் சேர்ந்த அணிகள் முன்பதிவு செய்துள்ளனர். நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,000 மூன்றாம் பரிசு 4,000, நான்காம் பரிசு 2,000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. விரைந்து முன்பதிவு செய்ய ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு போரீஸ் அறிவுறுத்தியுள்ளார்.