/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தேர்தல்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தேர்தல்
ADDED : டிச 15, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின், மாநில நிர்வாகிகள் தேர்தல், நேற்று விழுப்புரத்தில் நடந்தது.
இத்தேர்தலில் மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தலா 2 பேரும், துணைத்தலைவர் பதவிக்கு 3 பேரும், இரண்டு மாநில செயலாளர்கள் பதவிக்கு 5 பேர் என 6 பதவிகளுக்கு 15 பேர் போட்டியிட்டனர். தமிழகம் முழுதும் 33 மாவட்டங்களில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்திற்கான மேற்பார்வையாளர் ராஜா முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் 224 பேர் ஓட்டுப் பதிவு செய்தனர்.