/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊர்ப்புற நுாலகர்கள் உண்ணாவிரதம்
/
ஊர்ப்புற நுாலகர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஆக 08, 2025 11:54 PM

விழுப்புரம் : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி, விழுப்புரத்தில் ஊர்ப்புற நுாலகர்கள் சார்பில், உண்ணாவிரதம் நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமு தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் அனுமந்தன் முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் சார்லஸ் வரவேற்றார்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த, தமிழகத்தில் உள்ள 1,915 ஊர்ப்புற நுாலகங்களை கிளை நுாலகங்களாக தரம் உயர்த்த வேண்டும்; கடந்த 13 ஆண்டுகளாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நுாலகர்களுக்கு பதவி உயர்வு மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்; என வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் இளஞ்செழியன், செயலாளர் வேல்முருகன், பிரசார செயலாளர் பூவழகன், பொருளாளர் செங்கேணி ஆகியோர் பேசினர்.
ஊர்ப்புற நுாலகர் புஷ்பலதா நன்றி கூறினார்.