/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு
கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு
கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு
ADDED : ஜன 02, 2026 04:31 AM
விழுப்புரம்: திண்டிவனம் அருகே கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளோர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
திண்டிவனம் தாலுகா அவணம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
எங்கள் கிராமத்தில், ரேஷன் கடை அருகே 3 வேல்களுடன் சிறிய முருகன் கோவில் வைத்து மூன்று தலைமுறையாக வழிபாடு செய்து வருகிறோம். அங்கு முருகருக்கு கோவில் கட்ட முடிவு செய்து, அதற்கான திருப்பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கினோம்.
இந்நிலையில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தற்போது சென்னையில் வசித்து வரும் தனி நபர்கள், கோவில் கட்ட இருக்கும் இடத்தில் இடையூறாக சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணியில் ஈடுபடுகின்றனர்.
இதை தட்டிக்கேட்ட எங்களை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கோவில் கட்டுவதற்கு உரிய அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.

