/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
/
சத்துணவு பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : ஜன 02, 2026 04:32 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமை ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணைச் சேர்மன் ஜீவிதா ரவி முன்னிலை வகித்தார். சத்துணவு மேலாளர் சண்முகம் வரவேற்றார்.
புதுச்சேரி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
கண் கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், மேலாளர் கலைவாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

