ADDED : ஜன 02, 2026 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் இயற்கை வேளாண் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 12ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் மடத்து வீதி அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, இயற்கை வேளாண் உற்பத்தியாளர் சங்க தலைவர் வெங்கடசுப்பு தலைமை தாங்கி நம்மாழ்வாரின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இயற்கை மூலிகை, நாட்டு வெல்லம் கலந்த கவுனி அரிசி அவல், கருப்பு கவுனி பாயாசம் வழங்கப்பட்டது.

