நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் நிலம் மனை முகவர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் நிலம் மனை முகவர் மற்றும் கட்டுமானம் அனைத்து கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அன்பழகன், செல்வராஜ், பிரகாஷ், சுரேஷ், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கட்டுமான விலைவாசி உயர்வை கண்டிப்பது. நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது. மணல் குவாரி விரைவில் திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

