/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் 'திடீர்' முற்றுகை
/
கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் 'திடீர்' முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் 'திடீர்' முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் 'திடீர்' முற்றுகை
ADDED : ஆக 26, 2025 11:54 PM

விழுப்புரம் : ரேஷன் கடை கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கக்கோரி, கிராம மக்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் அருகே இளந்துறை கிராம மக்கள், நேற்று மதியம் 1:00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரிடம் கலெக்டரை சந்திக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது போலீசார், சட்டசபை பேரவை பொது கணக்கு குழுவினர் வந்துள்ளதாகவும், கலெக்டரை தற்போது சந்திக்க முடியாது எனவும் அவர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள், போலீசாரோடு வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த டி.ஆர்.ஓ., அரிதாஸ், மக்களை சமாதானம் செய்து கோரிக்கை குறித்து கேட்டார். அப்போது மக்கள் அவரிடம் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் பொது பயன்பாட்டிற்கு உள்ள இடத்தில் அரசால் ஒதுக்கீடு செய்து ரேஷன் கடை கட்டும் பணி நடந்தது. தற்போது அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு ரேஷன் கடை கட்டடடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்,' என்றனர்.
இதை மனுவாக பெற்று கொண்ட டி.ஆர்.ஓ., பரிசீலித்து உரிய நடவிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.