/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனூர் அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
மேல்மலையனூர் அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 27, 2011 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலூர்பேட்டை : மேல்மலையனூரில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
சங்கத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். கூட்டு மாவட்ட தலைவர் ரத்தின சபாபதி புதிய நிர்வாகிகளை பொறுப்பில் அமர்த்தி, சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். புதிய தலைவர் ஜெயராமன் , செயலாளர் உதயபாஸ்கரன், பொருளாளர் சங்கர் பதவி ஏற்றனர். மண்டல தலைவர் தங்கராஜ், மாவட்ட தலைவர்கள் சங்கரன், அய்யப்பன், சத்தியமூர்த்தி, ராஜவேலாயுதம், பிரபாகரன், நடராஜன் வட்டார தலைவர்கள் சந்தானம், விஜயலட்சுமி, பாஸ்கரன் மற்றும் ஆரிப், அர்ஷத் கலந்து கொண்டனர். நாகேந்திரன் நன்றி கூறினார்.