/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் தொழிலதிபரிடம் ரூ.2.65 லட்சம் நுாதன மோசடி
/
விழுப்புரம் தொழிலதிபரிடம் ரூ.2.65 லட்சம் நுாதன மோசடி
விழுப்புரம் தொழிலதிபரிடம் ரூ.2.65 லட்சம் நுாதன மோசடி
விழுப்புரம் தொழிலதிபரிடம் ரூ.2.65 லட்சம் நுாதன மோசடி
ADDED : நவ 28, 2024 01:07 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் நிதி நிறுவன அதிபரை நுாதனமாக ஏமாற்றி ரூ.2.65 லட்சத்தை சுருட்டிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம், கண்ணப்பநாயினார் தெருவை சேர்ந்தவர் விஜயராஜ் மகன் ராஜேஷ்,46; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது மொபைலில் உள்ள இன்ஸ்டாகிராமை கடந்த அக்., 22ம் தேதி பயன்படுத்திய போது ஒரு விளம்பரம் வந்துள்ளது.
அதில் ஜூடியோ பிரான்சிஸ் துணிக்கடைக்கு டீலர்ஷீப் தேவை என்றால் விண்ணப்பிக்கலாம் என இருந்தது.
இந்த லிங்கிற்குள் சென்ற ராஜேஷ், மர்ம நபர் கேட்டதன்பேரில் தனது ஆதார், பான், வங்கி ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட விபரங்களை அனுப்பியுள்ளார்.
பின், மர்ம நபர், டீலர்ஷீப் பெற பதிவு கட்டணம் கட்ட வேண்டும் என கூறியதை தொடர்ந்து, ராஜேஷ், தனது வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.2,65,500 அனுப்பியுள்ளார். அதன்பிறகு ராஜேஷிற்கு டீலர்ஷீப் தராமல் அதிக பணம் கேட்ட போது தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையிலான போலீசார், வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.