/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
/
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஆக 04, 2025 11:10 PM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், ஒன்றிய , நகர, பேரூராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், தொகுதி பொறுப்பாளர்கள் துரை சரவணன், கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட துணை அமைப்பாளர் புஷ்பராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலா ளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.