/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குற்றமில்லா விழுப்புரம் சரகம் டி.ஐ.ஜி., திஷா மித்தல் உறுதி
/
குற்றமில்லா விழுப்புரம் சரகம் டி.ஐ.ஜி., திஷா மித்தல் உறுதி
குற்றமில்லா விழுப்புரம் சரகம் டி.ஐ.ஜி., திஷா மித்தல் உறுதி
குற்றமில்லா விழுப்புரம் சரகம் டி.ஐ.ஜி., திஷா மித்தல் உறுதி
ADDED : ஜன 13, 2024 07:35 AM

விழுப்புரம் : 'பொது மக்களின் புகார்கள், குறைகள் குறித்து விசாரித்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி., திஷா மித்தல் கூறினார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த ஜியாவுல் ஹக், தஞ்சாவூர் சரகத்திற்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி., திஷா மித்தல் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று மாலை விழுப்புரம் சரகத்தின் 32வது டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐ.பி.எஸ்., முடித்து திருப்பூர் துணை ஆணையராகவும், பெரம்பலுாரில் எஸ்.பி.,யாகவும், திருப்பூர் மற்றும் மயிலாப்பூரில் துணை ஆணையராக பணிபுரிந்தேன்.
பிறகு பதவி உயர்வு பெற்று சென்னை இணை ஆணையராகவும், சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.,யாக இருந்து, தற்போது விழுப்புரம் சரகத்துக்கு வந்துள்ளேன்.
பொது மக்களின் புகார்கள், குறைகள் குறித்து விசாரித்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள், கள்ளச்சாராயம் ஒழிப்பு, குழந்தைகள், பெண்கள் மீதான வன்கொடுமை குற்றங்கள் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும்.
டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் களப்பணியில் நேர்மையாகவும், நடுநிலையாகவும், காவல் துறைக்கு நற்பெயர் பெற்றுத்தரும் வகையில் பணியாற்ற வேண்டும். விழுப்புரம் சரகம் குற்றமில்லாத பகுதியாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசாரின் தேவைகள், கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார்களுக்கு 94981 23777 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.