/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் - சென்னை ரயில் பாதை தண்டவாளம் மாற்றும் பணி தீவிரம்
/
விழுப்புரம் - சென்னை ரயில் பாதை தண்டவாளம் மாற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் - சென்னை ரயில் பாதை தண்டவாளம் மாற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் - சென்னை ரயில் பாதை தண்டவாளம் மாற்றும் பணி தீவிரம்
ADDED : செப் 23, 2024 11:57 PM

விழுப்புரம் : விழுப்புரம் - சென்னை மார்க்க ரயில்வே பாயிண்டில் உள்ள தண்டவாளத்தை மாற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் - சென்னை ரயில் தடத்தில் அதிவேக ரயில்கள் செல்வதால், பாதுகாப்பாக செல்வதற்காக அதற்கேற்ற வகையில் தண்டவாளங்களும் கூடுதல் கிலோ கணக்கில் மாற்றி பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்க ரயில்கள் செல்லும் பாயிண்டில், 52 கிலோ எடையுள்ள தண்டவாளத்தை மாற்றி, 60 கிலோ எடையுள்ள தண்டவாளத்தை பொருத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது.
இந்த பணிகளில், தெற்கு ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் கார்த்திக் பாலாஜி, பொறியாளர்கள் ராம் சத்தியநாராயணா, ராஜ்குமார், அசோக், ரயில்வே உதவி மேலாளர் அரவிந்த் தலைமையில் காங்கிமேன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.