/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் விழுப்புரம் நகரம் ஸ்தம்பிப்பு

ADDED : அக் 19, 2025 11:51 PM

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மார்கெட் வீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் நகரம் விழாக்கோலம் பூண்டது.
தீபாவளி பண்டிகை தருணத்தில், விழுப்புரத்தில் பரவலாக பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே குடும்பங்களோடு வந்து புத்தாடை வாங்கவும், பொருட்களை வாங்கி செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று வெயில் காய்ந்தும், சில நேரங்களில் வானம் மேக மூட்டத்தோடும் இருந்தது. இதை பயன்படுத்தி விழுப்புரம் நகரில், புதுச்சேரி, சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் தீபாவளி பர்ச்சேஸ் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால், காலை 9:00 மணி முதல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பாதுகாப்பு பணிகளில் போதுமான போலீசார் இல்லாததால், பொதுமக்கள் தங்களின் உடைமைகளை பாதுகாத்து கொள்ள தவித்தனர்.
விழுப்புரம் நகரில் உள்ள சிறிய, சிறிய வீதிகள் கூட வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் இடங்களாக மாறியதால் பொதுமக்கள் அதில் சிக்கி சிரமப்பட்டனர்.