/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் என்.எஸ்.எஸ்., நிறைவு விழா
/
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் என்.எஸ்.எஸ்., நிறைவு விழா
ADDED : அக் 19, 2025 11:50 PM

மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி சார்பில் நடந்த என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா ஆசூரில் நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அகிலா வரவேற்றார் ஹோலி ஏஞ்சல் கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் கீர்த்திவாசன் திட்ட அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் சுசிலா முத்துசாமி, நிர்வாக அலுவலர்கள் சுரேந்தர், ஆசிரியர்கள் மாசிலாமணி, சுந்தர்ராஜ், பாலசந்தர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முகாமில் பள்ளி வளாகங்களை துாய்மை செய்தல், முதியோர் கல்வி, விழிப்புணர்வு முகாம்களை நடத்திய மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.