/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னை வாலிபர் கொலை போதை நண்பருக்கு 'காப்பு'
/
சென்னை வாலிபர் கொலை போதை நண்பருக்கு 'காப்பு'
ADDED : அக் 19, 2025 03:24 AM

மரக்காணம்: சென்னை வாலிபரை வெட்டி கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் கார்த்திக், 30; இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன், மரக்காணம், முதலியார்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 32; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், கார்த்திக் மொபைல் போனை, ஏழுமலை மறைத்து வைத்தார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்திக், ஏழுமலை மரக்காணம் டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஏழுமலையின் தலையில், மதுபாட்டிலால் கார்த்திக் தாக்கினார்.
இதில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஏழுமலை அன்றிரவு, வீட்டின் பின்புற கொட்டகையில் துாங்கினார். நேற்று அதிகாலை, அங்கு வந்த கார்த்திக், ஏழுமலையை வெட்டி கொலை செய்தார். மரக்காணம் போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.