நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தாய், மகன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 40; இவரது மனைவி ரஞ்சிதா, 35; இந்த தம்பதிக்கு, லோகேஷ்வரன்,15; என்ற மகன் உள்ளார்.
கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால், ரஞ்சிதா கடந்த 14ம் தேதி கோபித்துக்கொண்டு, பெருமுக்கலில் இருந்து, வளவனுார் அருகே தனது தாய் வீட்டிற்கு மகனுடன் சென்றார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், தாய் வீட்டிலிருந்து மகனுடன் வெளியே சென்ற ரஞ்சிதா மீண்டும் கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், ரஞ்சிதாவின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, தாய், மகனை தேடி வருகின்றனர்.