/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழில் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை புதுச்சேரியை சேர்ந்த நால்வருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
/
தொழில் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை புதுச்சேரியை சேர்ந்த நால்வருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
தொழில் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை புதுச்சேரியை சேர்ந்த நால்வருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
தொழில் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை புதுச்சேரியை சேர்ந்த நால்வருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ADDED : நவ 29, 2024 07:11 AM

விழுப்புரம்: தொழில் போட்டியால் ஏற்பட்ட விரோதத்தில், தொழிலதிபரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பளித்தது.
புதுச்சேரி, பூமியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(எ) கொட்டா ரமேஷ்,50; ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருடன், வாணரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(எ) மர்டர் மணிகண்டன், மடுவுபேட்டையை சேர்ந்த சுந்தர் (எ) சக்திவேல் ஆகியோரும், தொழில்முறை கூட்டாளிகளாக இருந்தனர். பின், இவர்கள் இருவரும் பிரிந்து வேறு நபருடன் சேர்ந்து தொழில் செய்ததால், விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி, தனது மனைவி ரத்னாவுடன் பைக்கில் விழுப்புரம் மாவட்டம், சின்ன கோட்டக்குப்பம், வண்ணார தெரு வழியாக சென்ற ரமேஷை, மூன்று பைக்குகளில் வந்த கும்பல் வழிமறித்தது. ரமேஷ் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்து, தப்பியது. புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், கடந்த 2020ம் ஆண்டு ஜன., 2ம் தேதி, சிறையிலிருந்து பரோலில் வந்த மர்டர் மணிகண்டன், முகிலன் உட்பட 6 பேர் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும், இதற்கான செலவுக்கு சுந்தர் பணம் தருவதாக கூறியதும் தெரிய வந்தது.
கொலை தொடர்பாக, புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்த முகிலன்,26; சாரம், சக்தி நகர் மணிகண்டன் (எ) கராத்தே மணி,24; மணவெளி, மூகாம்பிகை நகர் மதன்,22; புதுச்சேரி, ராஜா நகர் பத்மநாபன்,24; அரியாங்குப்பம் மணிகண்டன் (எ) மாம்பல சதீஷ்,26; கவுண்டம்பாளையம் கார்த்திக் (எ) அரிகரன்,24; மர்டர் மணிகண்டன், சுந்தர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது, இவ்வழக்கில் உள்ள முகிலன், மதன் ஆகியோர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாற்றப்பட்ட மணிகண்டன்(எ) கராத்தே மணி, கார்த்திக்(எ) அரிகரன், பத்மநாபன், மணிகண்டன்(எ) மாம்பல சதீஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மர்டர் மணிகண்டன், சுந்தர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் போலீஸ் பாதுகாப்போடு கடலுார் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபானி ஆஜரானார்.