/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்ட அளவில் நெடுந்துார ஓட்டப் போட்டிகள்
/
விழுப்புரம் மாவட்ட அளவில் நெடுந்துார ஓட்டப் போட்டிகள்
விழுப்புரம் மாவட்ட அளவில் நெடுந்துார ஓட்டப் போட்டிகள்
விழுப்புரம் மாவட்ட அளவில் நெடுந்துார ஓட்டப் போட்டிகள்
ADDED : ஜன 12, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்துார ஓட்டப் போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் துவங்கிய ஓட்டப் போட்டியை, கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டி, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில்,
17 வயது முதல் 25 வயது வரை உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்கள், அரசு பணியாளர்கள், பொதுப்பிரிவினர், 25 வயதுக்கு மேல் உள்ள அரசு அலுவலர்கள், பொதுப்பிரிவினர், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.