/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் நல பணியாளர்கள் அடிப்படை ஆதார பயிற்சி
/
மக்கள் நல பணியாளர்கள் அடிப்படை ஆதார பயிற்சி
ADDED : ஜூலை 27, 2011 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : பின் தங்கிய பகுதிகள் மானிய நிதி திட்டத்தின் கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கான அடிப்படை ஆதார பயிற்சி முகாம் காணையில் நடந்தது.காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமை மாநில ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பசுபதி, ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.சுற்றுச்சுழல், முழு சுகாதார திட்டம், தகவல் உரிமை சட்டம், எச்.ஐ.வி., எய்ட்ஸ், மகளிர் குழுக்கள் உள்ளிட்ட பயிற்சிகள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் கிரேசி, மைக்கேல், பாலமுருகன், குணமாலினி ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.