/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் சிக்கிய இளம்பெண் பலி
/
தீ விபத்தில் சிக்கிய இளம்பெண் பலி
ADDED : செப் 04, 2011 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியை சேர்ந்த கோவிந்தன் மகள் லட்சுமி, 25.
இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது சேலையில் தீ பிடித்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்தனர்.