/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் லோக்சபா தொகுதி யாருக்கு?
/
விழுப்புரம் லோக்சபா தொகுதி யாருக்கு?
ADDED : ஜன 09, 2024 06:54 AM
விழுப்புரம் லோக்சபா தொகுதியில், மாற்று கட்சியில் போட்டியிட்ட 2 பேர், தற்போது அ.தி.மு.க.,வில் 'சீட்' பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு திண்டிவனம், வானுார், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் லோக்சபா தொகுதி (தனி), உருவாக்கப்பட்டது. முதல் தேர்தலில் விழுப்புரம் தொகுதி எம்.பி.,யாக, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட வி.சி., கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட டாக்டர் முத்தையன் (2,89,337 ஓட்டுகள்) , தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் உமா சங்கர் (2,09,663 ஓட்டுகள்) ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். பின்னர், இருவரும் அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டனர்.
தொடர்ந்து மாவட்ட அளவில், கட்சிப் பதவி பெற்று தீவிர பணியாற்றி வருகின்றனர். இவர்கள், வரும் 2024 தேர்தலில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட அ.தி.மு.க., சார்பில் 'சீட்' கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இதற்கிடையே விழுப்புரம் தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும், தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.