ADDED : செப் 26, 2011 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : பனமலை தாளகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பனமலை தாளகிரீஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு பால், தேன் மற்றும் நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தேவாரம், திருவாசகம் படித்தனர். செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகமும், நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகமும் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண்கள் அகல் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.