/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூத்தோர் தடகள போட்டியில் விழுப்புரம் போலீசார் சாதனை
/
மூத்தோர் தடகள போட்டியில் விழுப்புரம் போலீசார் சாதனை
மூத்தோர் தடகள போட்டியில் விழுப்புரம் போலீசார் சாதனை
மூத்தோர் தடகள போட்டியில் விழுப்புரம் போலீசார் சாதனை
ADDED : ஜன 09, 2025 07:05 AM

விழுப்புரம்: மதுரையில் நடந்த மூத்தோர் தடகள போட்டியில் வென்று விழுப்புரம் மாவட்டத்தில் சாதித்த காவலர்களை, எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.
மதுரையில் போலீசார் பங்கேற்ற மூத்தோர் தடகள போட்டி கடந்த 3,4,5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில், விழுப்புரம் மாவட்ட போலீசார் பலர் பங்கேற்றனர். இதில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார். திருவெண்ணெய்நல்லுார் தலைமை காவலர் வரலட்சுமி, 400 மீட்டர் தடைதாண்டு ஓட்டம் மற்றும் 5 கி.மீ., நடை ஓட்டம் பிரிவுகளில் தங்கம், வெள்ளி பதக்கத்தை வென்றார்.
விழுப்புரம் அனைத்து மகளிர் தலைமை காவலர் எழிலரசி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும், பட்டானுார் சோதனை சாவடி தலைமை காவலர் அன்பரசு நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முதல் நிலை காவலர் பிரகாஷ், குண்டு எறிதலில் வெண்கல பதக்கத்தையும், வட்டு எறிதலில் தங்க பதக்கத்தையும் வென்றனர். பதக்கம் வென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த காவலர்களை, எஸ்.பி., சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.