/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் மழை பதிவு
/
மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் மழை பதிவு
மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் மழை பதிவு
மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் மழை பதிவு
ADDED : அக் 20, 2025 12:14 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக விழுப்புரத்தில் 45 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் பரவலாக மழை பெய்தாலும், இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளங்களாக காட்சியளிக்கிறது. பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பியதோடு, விவசாய விளை நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விபரம் :
விழுப்புரம் 45 மி.மீ., கோலியனுார் 10 மி.மீ., வளவனுார் 10 மி.மீ., கெடார் 5 மி.மீ., முண்டியம்பாக்கம் 14 மி.மீ., நேமூர் 3 மி.மீ., கஞ்சனுார் 2.40 மி.மீ., சூரப்பட்டு 6 மி.மீ., வானுார் 14 மி.மீ., திண்டிவனம் 20 மி.மீ., மரக்காணம் 10 மி.மீ., செஞ்சி 4 மி.மீ., வல்லம் 4 மி.மீ., வளத்தி 3.50 மி.மீ., மணம்பூண்டி 9 மி.மீ., அனந்தபுரம் 5 மி.மீ., முகையூர் 8 மி.மீ., அரசூர் 1 மி.மீ., திருவெண்ணெய்நல்லுார் 1 மி.மீ.,
மாவட்டத்தில் மொத்தம் 174.90 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி 8.33 மி.மீ., ஆகும்.