/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த மழை 2 மணி நேரத்தில் 85 மி.மீ., பதிவு
/
விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த மழை 2 மணி நேரத்தில் 85 மி.மீ., பதிவு
விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த மழை 2 மணி நேரத்தில் 85 மி.மீ., பதிவு
விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த மழை 2 மணி நேரத்தில் 85 மி.மீ., பதிவு
ADDED : ஆக 03, 2025 05:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையால் சாலையில் தண்ணீர் ஆறாக ஆடியது. அதிகபட்சமாக கெடாரில் 85 மி.மீ., மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் கோடையை போல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு திடீரென மழை பெய்தது.
இதனையடுத்து, நள்ளிரவு 1:00 மணிக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையால் நகரில் பல இடங்களில் மழை நீர் குளமாக தேங்கியது. சாலைகளில் வெள்ளம்போல் ஓடியது.
இந்திராநகர் ரயில்வே தரை பாலத்தில் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை நெடுஞ்சாலை தீயணைப்பு நிலையம் எதிரேயும்,
திரு.வி.க., வீதி, நகராட்சி பள்ளிமைதானம், ரயில்வே மைதானம் உள்ளிட்ட தாழ்வான பல இடங்களிலும்
மழை நீர் குளம் போல் தேங்கியது.
பஸ் நிலையம், ரயில்வே தரை பாலம் பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீர் இரைத்து அகற்றப்பட்டது. மழை நீர் பல இடங்களில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தது, கடும் வெயில் தாக்கத்திற்கு ஆறுதலாக அமைந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) விழுப்புரம் 72; கோலியனுார் 61; வளவனுார் 52; கெடார் 85; முண்டியம்பாக்கம் 59; நேமூர் 20; சூரப்பட்டு 75; திண்டிவனம், 37; மரக்காணம், 51; செஞ்சி, 30; வல்லம் 20; நேமூர் 20; வளத்தி 17; மணம்பூண்டி 18; முகையூர், 46; செம்மேடு, 14; மொத்தம் 705 மி.மீ., சராசரி 33.5 மீ.மீட்டராகும்.

