/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பள்ளி ஆசிரியரிடம் நுாதன முறையில் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'
/
விழுப்புரம் பள்ளி ஆசிரியரிடம் நுாதன முறையில் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'
விழுப்புரம் பள்ளி ஆசிரியரிடம் நுாதன முறையில் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'
விழுப்புரம் பள்ளி ஆசிரியரிடம் நுாதன முறையில் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'
ADDED : பிப் 15, 2024 06:38 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆசிரியை நுாதனமாக ஆன்லைன் வழியாக ஏமாற்றி ரூ.3.04 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் மகன் சாம்ராஜ்பிரபு,34; அரசு பள்ளி ஆசிரியர். இவரின் மொபைலுக்கு, கடந்த 27 ம் தேதி டெலிகிராம் ஐ.டி., மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், பகுதிநேர பணியாக அவர் அனுப்பும் லிங்கிற்குள் சென்று சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி, ஒரு லிங்கை அனுப்பினார்.
இதை நம்பி, சாம்ராஜ்பிரபு அந்த லிங்கிற்குள் சென்று தனக்கான யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு உருவாக்கிய பின், மர்ம நபர் கூறிய டாஸ்கை முடித்து ரூ.10 ஆயிரம் செலுத்தி, ரூ. 20,484 மற்றும் ரூ.13,500 செலுத்தி ரூ.32,846 பெற்றார்.
தொடர்ந்து சாம்ராஜ்பிரபு கடந்த 30ம் தேதி தனது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட பேடிஎம் அப் மூலம் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 100 ரூபாய் செலுத்தி டாஸ்க் முடித்தார்.
பின், அவருக்கு சேர வேண்டிய தொகை வராமலிருந்த போது, மர்ம நபர் மேலும் பணம் கேட்டார். அப்போது தான் சாம்ராஜ்பிரபுவிற்கு தான் பணம் இழந்த விஷயம் தெரியவந்துள்ளது.
அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

