/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கராத்தேவில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை
/
கராத்தேவில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 14, 2025 01:09 AM

விழுப்புரம் : சுதந்திர தின கராத்தே போட்டியில், விழுப்புரம் மாணவ, மாணவியர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
டில்லியில், 19வது சுதந்திர தின கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்தது. விழுப்புரம் அடுத்த கோலியனுார் கலாம் செய்க்கோ காய் கராத்தே பயிற்சி மைய தலைவர் பழனிவேல் தலைமையில் மாணவ, மாணவியர்கள் சீனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டனர்.
இதில், மாணவர்கள் தருண், லோகேஸ்வரன், விக்னேஸ்வரன், தீபன் ராஜ் ஆகியோர் தங்கமும்,
மாணவர் கவுதம், மாணவிகள் ஷாலிகா, கவிநிலா ஆகியோர் வெள்ளியும், மாணவர் சுஜித்ராம், மாணவி சவிதா ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனைபடைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை செய்க்கோ காய் கராத்தே மைய சேர்மன் வினாயகமூர்த்தி, துணைத்தலைவர் மகேந்திரன், பொது செயலாளர் அரவிந்தன் ஆகியோர் வாழ்த்தினர்.