/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
/
மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி விழுப்புரம் மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 19, 2025 11:38 PM

விழுப்புரம் : மயிலாடுதுறையில் நடந்த மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் வென்ற விழுப்புரம் மாணவர்கள் எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், நல்லாத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 27ம் தேதி மாநில அளவிலான 9வது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, வேலுார், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டிகள் 8, 10, 11, 12, 14, 15, 16 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தது. 300 பேர் பங்கேற்ற போட்டியில், விழுப்புரம் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு, டிராபி, பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., பாராட்டி வாழ்த்தினார். பயிற்சியாளர் காமேஸ்வரன் உட்பட பெற்றோர்கள் உடனிருந்தனர்.