/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்பந்து வீரர்களை உருவாக்கும் விழுப்புரம் சப் இன்ஸ்பெக்டர்
/
கால்பந்து வீரர்களை உருவாக்கும் விழுப்புரம் சப் இன்ஸ்பெக்டர்
கால்பந்து வீரர்களை உருவாக்கும் விழுப்புரம் சப் இன்ஸ்பெக்டர்
கால்பந்து வீரர்களை உருவாக்கும் விழுப்புரம் சப் இன்ஸ்பெக்டர்
ADDED : ஜூன் 05, 2025 07:01 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி, கால்பந்து பயிற்சியளித்து போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு வீரர்கள், வீராங்கணை களை உருவாக்கி வருகிறார்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் தண்டபாணி. இவர், விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் தனது ஓய்வு நேரங்களில் காலை, மாலை இரு வேளையும் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.
கால்பந்து விளையாட்டு வீரரான தண்டபாணி, தன்னை போல் மற்றவர்களும் கால்பந்து போட்டியில் விளையாடி வெல்ல வேண்டும் என முழு ஈடுபாட்டுடன் பயிற்சி அளித்து வருகிறார்.
இவர், தினந்தோறும், வீரர்களுக்கு 5 ரவுண்ட் ஓட்டம், 30 நிமிடம் உடற்பயிற்சி, 30 நிமிடம் யோகா பயிற்சியையும் சேர்த்து அளித்து வருகிறார்.
தொடர்ந்து, கால்பந்து விளையாட்டில் உள்ள யுக்திகளை கற்றுத்தருகிறார். இவரிடம் பயிற்சி பெற்றோர் கடந்த 2020ம் ஆண்டு நேபாலில் நடந்த கால்பந்து போட்டியில் வென்றுள்ளனர்.
தற்போது, மாவட்ட அளவிலான போட்டியில், பங்கேற்று வெற்றி பெற வீரர்கள், வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.