/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : செப் 06, 2011 10:42 PM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூரில் அ.தி.மு.க., ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லூர் ராஜா திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ஞானமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், தொகுதி செயலாளர் சேகர், நகர தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரான மோகன் மற்றும் எம்.எல்.ஏ., குமரகுரு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். மாவட்ட தலைவர் பச்சையாப்பிள்ளை, பொருளாளர் சந்திரசேகரன், அண்ணா தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதரன், பொருளாளர் நாராயணன், தலைமைகழக பேச்சாளர் வீரபெருமாள், நகர செயலாளர் கேசவன், பொதுக்குழுஉறுப்பினர் மணி, சிவகாமி, முருகன், அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.