/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விஷம் கலந்த வாழைப்பழம் சாப்பிட்ட 25 ஆடுகள் பலி
/
விஷம் கலந்த வாழைப்பழம் சாப்பிட்ட 25 ஆடுகள் பலி
ADDED : ஜூலை 31, 2011 03:07 AM
விழுப்புரம் : வாழைப்பழத்தில் விஷம் வைத்து 25 ஆடுகளை கொன்ற விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சித்தாத்தூர் திருக்கையை சேர்ந்தவர் பரமசிவம்; விவசாயி.
இவர் அரியலூர் கெண்டியான் என்பவருக்கு கண்டமானடியில் உள்ள நிலத்தில் குத்தகைக்கு பயிர் செய்து வருகிறார். தற்போது இந்த நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று முன் தினம் விஷ மருந்து கலந்த வாழை பழங்களை கரும்பு தோட்டத்தில் பரப்பி வைத்திருந்தார்.அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகள் விஷம் கலந்த வாழை பழங்களை தின்று மயங்கி விழுந்து இறந்தன. கண்டமானடி காலனியைச் சேர்ந்த அமிர்தவள்ளிக்கு சொந்தமான 10 ஆடுகள், பிச்சம்மாள் 4 ஆடுகள், பூபதி 3 ஆடுகள், ரத்தினம்பாள் 3 உட்பட 25 ஆடுகள் இறந்தன.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து பரமசிவத்தை தேடி வருகின்றனர்.