/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனூரில் டிரைவரை தாக்கிவிட்டு கடத்தப்பட்ட கார் விழுப்புரத்தில் மீட்பு

ADDED : செப் 13, 2011 12:59 AM
விழுப்புரம் : வளவனூர் அருகே டிரைவரை தாக்கி கடத்தப்பட்ட இண்டிகா கார், போலீசாரால் விழுப்புரத்தில் பிடிபட்டது.புதுச்சேரி தனியார் டிராவல்ஸ் நிறுவன டிரைவர் ஏழுமலை.
வளவனூரை சேர்ந்த இவர், நேற்றிரவு 9.17 மணிக்கு தனது வீட்டிற்கு டி.என்.31 ஏ.சி. 4837 என்ற எண்ணுள்ள வெள்ளை நிற இண்டிகா காரை ஓட்டி சென்றார். அப்போது ஆளில்லா இடத்தில் இயற்கை உபாதைக்காக, ஏழுமலை இறங்கிய போது அடையாளம் தெரியாத இருவர், அவரை தாக்கிவிட்டு, காரை கடத்தி சென்றனர். இதுகுறித்து வளவனூர் போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், நகர டி.எஸ்.பி, சேகரன் தலைமையிலான போலீசாரும், கடத்தப்பட்ட காரை பின் தொடர்ந்து சென்றனர். போலீசார் விரட்டி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை விழுப்புரம் சென்னை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி சென்றனர்.அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்து, மர்ம ஆசாமிகளின் தடயங்களை சேகரித்தனர்.