/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்மையகரம் கிராமத்தில் இலவச ஆடுகள் வழங்கல்
/
அம்மையகரம் கிராமத்தில் இலவச ஆடுகள் வழங்கல்
ADDED : செப் 20, 2011 09:12 PM
கள்ளக்குறிச்சி : அம்மையகரம் கிராமத்தில் 30 பேருக்கு இலவச ஆடுகள் மற்றும் 98 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் சண்முகம் வழங்கினார்.
சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தில் இலவச ஆடுகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மோகன், அழகுவேல்பாபு முன்னிலை வகித்தனர். கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் அழகரசன் வரவேற்றார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு நிலமும், தலா நான்கு ஆடுகளும், 98 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்கி பேசினார். கள்ளக்குறிச்சி ஆர்.டி. ஓ., உமாபதி, தாசில்தார் வைகுண்டவரதன், பி.டி. ஓ., ஆதம், கால்நடை மருத் துவர்கள் ராஜன், சீனுவாசன், வி.ஏ.ஓ.,க்கள் ராணி, சோலையாப்பிள்ளை, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர், நகர செய லாளர் பாபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் கலியமூர்த்தி கலந்து கொண் டனர். கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.