/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
ADDED : நவ 17, 2024 04:41 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது.
முகாமில், பட்டியிலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் நடந்த முகாமை, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சேகர் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நகர செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் கவுதமன், முன்னாள் நகர துணைச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட பிரதிநிதி சின்னதுரை, பொறியாளர் அணி வெங்கடேசபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.