/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 24, 2025 06:52 AM

விழுப்புரம்: ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட 7 சட்டசபை தொகுதியில் மொத்தம், 1088 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடந்து வருகிறது. விழுப்புரம் நகராட்சி உயர்நிலை பள்ளி, ஜான்டூயி மேல்நிலை பள்ளி, பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளி, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்து கூறியதாவது;
எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 1950, மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதியில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் செஞ்சி, 04145-222007, மயிலம் 04147-239449, திண்டிவனம் (தனி) 04147-222090, விக்கிரவாண்டி 04146-233132, திருக்கோவிலுார் 04153-252316 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு கேட்க லாம் என தெரிவித்தார்.
நகராட்சி ஆணையர் வசந்தி, நகர்நல அலுவலர் பிரியா உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

