/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் சரிபார்த்தல் முகாம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
/
வாக்காளர் சரிபார்த்தல் முகாம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
வாக்காளர் சரிபார்த்தல் முகாம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
வாக்காளர் சரிபார்த்தல் முகாம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
ADDED : செப் 01, 2025 11:15 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த வாக்காளர் சரிபார்த்தல் முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம் நகரில் வார்டுகள் வாரியாக வாக்காளர் சரிபார்த்தல் முகாம் தொடங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் மேற்கு நகரம், வழுதரெட்டி 32வது வார்டுக்கான வாக்காளர் சரிபார்த்தல் முகாமிற்கான ஆய்வு கூட்டம், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் மேற்கு நகர பொறுப்பாளர் சக்கரை, வார்டு செயலாளர் பாபு, மாவட்ட கலை இலக்கிய பேரவை அணி அமைப்பாளர் முத்து கணேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பரத், நகர நிர்வாகிகள் காத்தவராயன், மோகன், மகேஷ், ஜெய்கணேஷ், மாறன், ராஜபாண்டியன், கலை, வல்லரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.