/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளவங்கோடு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம்
/
விளவங்கோடு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம்
ADDED : மார் 08, 2024 12:06 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, கன்னியாகுமரி மாவட்டம், விலவன்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடந்தது.
விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கில் இருந்த அனுப்பும் நிகழ்ச்சிக்கு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் பழனி தலைமை தாங்கி அனுப்பி வைத்தார்.
பின் அவர் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில், அரசு சேமிப்பு கிடங்கில் இருப்பு வைத்துள்ள தலா 550 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வெளியே எடுத்து விலவன்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.
ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல்அமீது, கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உட்பட அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

