/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரியலுார் மாவட்டத்திற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
/
அரியலுார் மாவட்டத்திற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
அரியலுார் மாவட்டத்திற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
அரியலுார் மாவட்டத்திற்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
PUBLISHED ON : டிச 25, 2025 06:49 AM

விழுப்புரம்: அரியலுார் மாவட்டத்திற்கு 200 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில், தற்போது, பழைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுப்பித்து சீர்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் இருந்து, அரியலுார் மாவட்டத்திற்கு 200 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்க தேர்தல் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, விழுப்புரத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான், நேரில் பார்வையிட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்து, அரியலுார் மாவட்டத்திற்கு 200 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தார்.