/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிக்கெட்டில் வி.ஆர்.பி., பள்ளி அணிக்கு இரண்டாம் பரிசு
/
கிரிக்கெட்டில் வி.ஆர்.பி., பள்ளி அணிக்கு இரண்டாம் பரிசு
கிரிக்கெட்டில் வி.ஆர்.பி., பள்ளி அணிக்கு இரண்டாம் பரிசு
கிரிக்கெட்டில் வி.ஆர்.பி., பள்ளி அணிக்கு இரண்டாம் பரிசு
ADDED : அக் 08, 2025 11:11 PM

விழுப்புரம்,:மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், வி.ஆர்.பி., பள்ளி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், விழுப்புரம் மாவட்ட அளவில் நடைபெற்றன. இதில், 124 பள்ளிகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.
விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், வளவனுார் அரசு ஆண்கள் பள்ளி அணி முதலிடமும், விழுப்புரம் வி.ஆர்.பி., ேமல்நிலைப் பள்ளி அணி, இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் விழுப்புரம் சேக்ரட் பள்ளி முதலிடமும், ஜெயேந்திரா பள்ளி இரண்டாமிடமும், வி.ஆர்.பி., பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற கேப்டன் உதயகுமார் தலைமையிலான அணியினர், கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கேப்டன் எழிலன் தலைமையிலான அணியினருக்கு, வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன் பாராட்டு தெரிவித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரிதிவிராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராபின்சன், சுபாஷ்னி ஆகியோர் உடனிருந்தனர்.