/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில கிரிக்கெட் போட்டி விழுப்புரம் அணி இரண்டாமிடம்
/
மாநில கிரிக்கெட் போட்டி விழுப்புரம் அணி இரண்டாமிடம்
மாநில கிரிக்கெட் போட்டி விழுப்புரம் அணி இரண்டாமிடம்
மாநில கிரிக்கெட் போட்டி விழுப்புரம் அணி இரண்டாமிடம்
ADDED : அக் 08, 2025 11:11 PM

விழுப்புரம்: மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், விழுப்புரம் அணி இரண்டாம் இடம் பிடித்தது.
கும்பகோணம் அருண் விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான 13 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
கிரிக்கெட் அகாடமி இடையிலான 25 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை, விழுப்புரம், கோயம்புத்துார், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் தென்காசியை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இதில் விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி அணி 'லீக்' போட்டியில் சென்னை அணியையும், அரை இறுதியில் கும்பகோணம் கிரிம்சன் அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் கோயம்புத்தூர் அணி வெற்றி பெற்றது. விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி அணி இரண்டாம் பரிசை வென்றது.
விழுப்புரம் அணி வீரர்கள் ஹஷ்வந்த் அரை இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தொடரின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை ரித்தீஷ் குமார் ஆகியோர் பெற்றனர்.