விழுப்புரம்: மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 49வது மாவட்ட இளையோர் தடகள போட்டி சமீபத்தில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. இதில் 14, 16, 18, 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என, மொத்தம், 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள், மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., சரவணன், மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமிகார்த்திக் ஆகியோர் சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசு தொகை வழங்கி பாராட்டினர். மாவட்ட தடகள சங்க செயலாளர் மணிவண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.