/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப துறை கருத்தரங்கம்
/
வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப துறை கருத்தரங்கம்
வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப துறை கருத்தரங்கம்
வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப துறை கருத்தரங்கம்
ADDED : ஏப் 17, 2025 05:10 AM

விழுப்புரம்: அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கினார். துறை தலைவர் சாதிக்பாஷா முன்னிலை வகித்தார். முன்னதாக மாணவி தேவதர்ஷினி வரவேற்றார். சென்னை யூரோகான் இண்ட்ஸ்ரூமண்ட்ஸ் நிறுவன இயக்குநர் கணேஷ்பவார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வேலை வாய்ப்பு பெறுவதற்கு, தொழில் துறையினர் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர். மணக்குள விநாயகர் கல்லூரி பேராசிரியர் லெனின் நடுவராக செயல்பட்டு, சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்தார்.
சிறந்த கட்டுரை வெளியிட்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.