ADDED : ஜூலை 28, 2025 10:13 PM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, ஜாதிச் சான்று வழங்கக் கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி பேரூராட் சி கீழக்கொந்தை அருகே எம்.ஜி.ஆர்., நகரில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 12:15 மணிக்கு தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, ஜாதிச் சான்று வழங்கக்கோரி யும் தாலுகா அலுவலகத்தில் வி.சி., மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரசாந்த் தலைமையில் முற் றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் செல்வமூர்த்தி, துணைதாசில்தார் பாரதிதாசன், வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விக்கிரவாண்டியில் உள்ள நரிக்குறவர் குடும்பங் களுக்கு ஏற்கனவே வேம்பி பகுதியில் மனைப்பட்டா வழங்கி இருப்பதாகவும், அதில் விடுபட்டவர்களுக்கு வழங்கவும், ஜாதிச் சான்று வழங்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் 1:15 மணிக்கு கலைந்து சென்றனர்.