ADDED : அக் 08, 2025 12:24 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாநில செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கி, கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். திட்ட தலைவர் சேகர், செயலாளர் அருள், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர்கள் அசோக்குமார், கண்ணியப்பன், ஏழுமலை உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில்,தமிழக மின் வாரியத்தில் கடந்த, 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கண்டமங்கலம், திருவெண்ணெய்நல்லுார் பகுதிகளை சேர்ந்த கேங்மேன்கள், 150க்கும் மேற்பட்டோர் பணி விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.