/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விஜயகாந்த் பிறந்த நாளில் த.வெ.க., மாநாடு தே.மு.தி.க.,வை இழுக்க யுக்தியா?
/
விஜயகாந்த் பிறந்த நாளில் த.வெ.க., மாநாடு தே.மு.தி.க.,வை இழுக்க யுக்தியா?
விஜயகாந்த் பிறந்த நாளில் த.வெ.க., மாநாடு தே.மு.தி.க.,வை இழுக்க யுக்தியா?
விஜயகாந்த் பிறந்த நாளில் த.வெ.க., மாநாடு தே.மு.தி.க.,வை இழுக்க யுக்தியா?
ADDED : ஜூலை 29, 2025 07:09 AM

த.வெ.க., 2வது மாநில மாநாட்டையொட்டி, விழுப்புரத்தில் அக்கட்சி நிர்வாகிகள் விழுப்புரத்தில் சுவர் விளம்பரம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்தாண்டு நடந்தது. இதையடுத்து, 2வது மாநாட்டை த.வெ.க., தலைவர் விஜய், வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெறு ம் என அறிவித்துள்ளார்.
மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் செய்வதில் த.வெ.க., நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வரும் தேர்தலில் த.வெ.க.,வை தங்கள் வசம் இழுக்க அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, சூசகமாக யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க.,வோடு கூட்டணியில் சேரலாம் என பச்சை கொடி காட்டியுள்ளார்.
இந்நிலையில், த.வெ.க., நிர்வாகிகள், விழுப்புரத்தில் மக்கள் விரும்பும் முதல்வர் விஜய் என 2வது மாநில மாநாட்டு சுவர் விளம்பரங்களை தீட்டி வருகின்றனர். இதன் மூலம் எந்த கட்சி விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாலும் முதல்வர் வேட்பாளர் அவர் தான் என்பதை த.வெ.க.,வினர் விளம்பரம் மூலம் உறுதி செய்து வருகின்றனர்.
இரு ஒரு பக்கம் இருந்தாலும், விஜய் நடத்தும் 2வது மாநாடு, தே.மு.தி.க., நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி நடத்துவதால் தே.மு.தி.க.,வினர் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் கூட்டணிக்கு இழுக்க த.வெ.க.,வின் யுக்தியாக கூட இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.