/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு: கண்டு கொள்ளாத அவலம்
/
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு: கண்டு கொள்ளாத அவலம்
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு: கண்டு கொள்ளாத அவலம்
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு: கண்டு கொள்ளாத அவலம்
ADDED : நவ 12, 2024 06:18 AM
வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட ராயபுதுப்பாக்கம் பகுதியில் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தையொட்டி புதுச்சேரி மாநிலமான ஆலங்குப்பம், அன்னை நகர் பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், ஓடை வழியாக ராயப்பேட்டைக்கு செல்கிறது. ஓடையை ஒட்டியே குடிநீர் போர்வெல் அமைந்துள்ளதால், கழிவுகள் அனைத்தும், குடிநீரில் கலக்கிறது.
இதனால், அப்பகுதி மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இந்த பிரச்னை இருந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள், விழுப்புரம் மாவட்ட கலெக்டர், வானுார் பி.டி.ஓ., மற்றும் தாசில்தாருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், உழவர்கரை நகராட்சி கமிஷனரிடமும் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்துள்ளனர். ஆனால், இதுவரை அப்பகுதி மக்களின் பிரச்னை தீர்க்கப்படவில்லை.
இது குறித்து ராயப்பேட்டை மக்கள் கூறுகையில், 'புதுச்சேரி மாநில எல்லையில் இருந்து வரும் ஓடை கழிவுநீர், போர்வெல்லில் கலக்கிறது. இதனால் நாங்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக எங்கள் பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது. இரு மாநில அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரி மாநில எல்லையில் எங்கள் கிராமம் அமைந்துள்ளதால், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே ஆலங்குப்பம், அன்னை நகர் பகுதியில் இருந்து வரும் அன்றாட கழிவுகளை எங்கள் கிராமத்திற்கு வராத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.