/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையிலிருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
/
வீடூர் அணையிலிருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வீடூர் அணையிலிருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வீடூர் அணையிலிருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : நவ 19, 2025 06:00 AM
விக்கிரவாண்டி: வீடூர் அணையில் இருந்து இன்று முதல் 135 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
திண்டிவனம் அடுத்த வீடூர் அணை அதன் மொத்த கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) தற்போது 30.350 அடி (475.752 மில்லியன் கன அடி) தண்ணீர் நிரம்பி உள்ளது.
திண்டிவனம், வானுார் பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் 2025-2026ம் ஆண்டு பாசனத்திற்காக அணையில் இருந்து இன்று முதல் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி வரை 135 நாட்களுக்கு 328.350 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்து விட அரசு செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து இன்று காலை 10:00 மணிக்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவக்குமார், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுகின்றனர்.