/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் டேங்க், பள்ளி கட்டடங்கள் சாலைகளை சீரமைக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை
/
குடிநீர் டேங்க், பள்ளி கட்டடங்கள் சாலைகளை சீரமைக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை
குடிநீர் டேங்க், பள்ளி கட்டடங்கள் சாலைகளை சீரமைக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை
குடிநீர் டேங்க், பள்ளி கட்டடங்கள் சாலைகளை சீரமைக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை
ADDED : டிச 08, 2024 05:30 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் புயல் கனமழையால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா தலைமையில் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில், பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலைகள், நகர்ப்புற சாலைகள், கிராமப்புற சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைத்திடவும், நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறை சார்பில், அனைத்து பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச்சுவர்கள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அரசு கட்டடங்களை நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்வதோடு, பாதிப்படைந்த கட்டடங்களை உடனடியாக கணக்கீட்டு, முழுமையாக சீரமைப்புபணிகள் மேற்கொள்ள வேண்டும்.
நீர்வளத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்திடுவதோடு, அனைத்து நீர்நிலைகளும் உறுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும், தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மேல்நிலை தொட்டியினை சுத்தம் செய்து, சரியான அளவு குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரினை விநியோகம் வழங்குவதை அனைத்து பகுதிகளில் உள்ள அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய்நாராயணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.